கல்விச்சாரல்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் கல்விச்சாரல் என்ற செயற்திட்டத்தின் கீழ் நடாத்திய க. பொ. த உயர்தர மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்கு 📚✒️

கடந்த 04ம் திகதி  பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதம், உயிரியல், கலை, வணிகம் ஆகிய நான்கு பிரிவு மாணவர்களுக்குமான மாதிரி வினாத்தாள்களின் கலந்துரையாடலும், அப்பாடம் சார்ந்த சந்தேகத்திற்குரிய பகுதிகளுக்கான தெளிவுப்படுத்தல்கள், பரீட்சை செய்யும் நுணுக்கங்கள் , மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல்களோடு மட்டுமல்லாமல் உயர்கல்வி மற்றும் தொழில் சார் வழிகாட்டல்கள் என்பனவற்றோடு சிறப்பாக இடம்பெற்றது. 


இவ் உதவிக்கருத்தரங்கிற்கு ஆதரவளித்த பாடசாலை சமூகத்திற்கும், கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் கல்வி சார் ஊக்கங்களை அளித்த வளவாளர்களுக்கும் நன்றிகளும்  பாராட்டுகளும்.❤️🎉


உதவிக்கருத்தரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨